இந்தியரை திருமணம் செய்த பாகிஸ்தான் இளம் பெண்,வாகா எல்லையில் பாகிஸ்தான் அதிகாரிகளிடம் ஒப்படைப்பு

#India #Pakistan #Marraige #Police
Mani
2 years ago
இந்தியரை திருமணம் செய்த பாகிஸ்தான் இளம் பெண்,வாகா எல்லையில் பாகிஸ்தான் அதிகாரிகளிடம் ஒப்படைப்பு

உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் முலாயம் சிங், 19 வயது பாகிஸ்தான் இளம்பெண் இக்ரா ஜீவானியை , ஆன்லைன் கேம் மூலம் சந்தித்தார். இறுதியில் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர்.

இக்ரா ஜிவானி இந்தியாவுக்கு வர முயன்றார், ஆனால் விசா கிடைக்கவில்லை, அவர் நேபாளம் சென்றார். முலாயம் சிங் அவளை அங்கு சந்தித்து விசா இல்லாமல் திருமணம் செய்து கொண்டார். பின்னர் அவளை இந்தியாவிற்கு அழைத்து வந்தான்.

பின்னர் இருவரும் பெங்களூரு வந்து குடும்பம் நடத்தி வந்தனர். அங்கு இந்துப் பெண்ணாக வாழ்ந்த இக்ரா, அவ்வப்போது பிரார்த்தனை செய்வார் என்று கூறப்படுகிறது. இது குறித்து அக்கம் பக்கத்தினர் புகார் அளித்ததையடுத்து, போலீசார் விசாரணை நடத்தினர்.

அப்போது இக்ரா ஜிவானியின் பாகிஸ்தான் பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்களை போலீசார் கைப்பற்றினர். பாகிஸ்தானை சேர்ந்த இக்ரா என்ற பெண் சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் இக்ரா ஜிவானி பஞ்சாப் கொண்டு செல்லப்பட்டு வாகா எல்லையில் பாகிஸ்தான் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!