லண்டனில் உள்ள ஈரானிய தூதரகம் முன் போராட்டம்
#Protest
#Embassy
#Iran
#London
Prasu
1 hour ago
லண்டனில் உள்ள ஈரானிய தூதரகத்திற்கு முன்பு இடம்பெற்ற போராட்டங்கள் வன்முறையாக மாறிய நிலையில் காவல்துறை அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதில் நான்கு காவல்துறை அதிகாரிகள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வன்முறை சீர்குலைவு மற்றும் அத்துமீறல் உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்ட 14 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன் எதிர்பாளர் ஒருவர் தூதரகத்தில் ஏற்பட்டிருந்த ஈரானிய கொடியை அகற்ற முனைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
(வீடியோ இங்கே )