23ம் திகதி மீண்டும் வெளியாகும் தெறி
அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் 2016ம் ஆண்டு வெளியான படம் 'தெறி'. ஜி.வி.பிரகாஷ் இசையமைத்த இப்படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரித்திருந்தார்.
இதில் விஜய் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார். இப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. மேலும் வசூலிலும் சாதனை படைத்தது.
பொங்கலை ஒட்டி ஜனவரி 15 அன்று தெறி படம் ரீரிலீஸ் ஆக உள்ளதாக தயாரிப்பாளர் தாணு போஸ்டர் வெளியிட்டு அறிவித்திருந்தார்.
ஆனால், வரவிருக்கும் படங்களின் தயாரிப்பாளர்களின் கோரிக்கைக்கு இணங்க 'தெறி' படத்தின் வெளியீட்டை ஒத்திவைக்க நாங்கள் முடிவு செய்துள்ளோம் என்று தாணு அறிவித்தார்.
இந்நிலையில், தெறி ரீ ரிலீஸ் ஆகும் புதிய தேதியை தயாரிப்பாளர் அறிவித்துள்ளார். அதன்படி, தெறி படம் வரும் 23ம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தெறி ரீ-ரிலீஸின் டிரெய்லர் நாளை வெளியாகும் எனவும் தயாரிப்பாளர் அறிவித்துள்ளார்.
(வீடியோ இங்கே )