திடீரென மகளுடன் நடிகர் கமல்ஹாசனை சந்தித்த நடிகை ஊர்வசி

#Actor #Actress #TamilCinema #Kamal
Prasu
1 hour ago
திடீரென மகளுடன் நடிகர் கமல்ஹாசனை சந்தித்த நடிகை ஊர்வசி

தென்னிந்திய திரை உலகில் ஏராளமான படங்களில் கதாநாயகியாக நடித்த ஊர்வசி தற்போது குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

ஊர்வசி மகள் தேஜலட்சுமியும் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார். மலையாளத்தில் உருவாகும் 'சுந்தரியாயவள் ஸ்டெல்லா' என்ற படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

இந்த நிலையில் ஊர்வசியும், மகள் தேஜலட்சுமியும் நடிகர் கமல்ஹாசனை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளனர். 

சந்திப்பின் போது எடுத்த புகைப்படங்களை தனது சமூக வலைதளத்தில் தேஜலட்சுமி பகிர்ந்து வெளியிட்டுள்ள பதிவில், 2001ம் ஆண்டு நான் குழந்தையாக இருக்கும் போது அம்மா நடித்த 'பஞ்சதந்திரம்' படப்பிடிப்பு தளத்தில் நானும் இருந்தேன்.

அங்கு நான் கோபமாக இருக்கும்போது கமல் சார் என்னை தூக்கி சென்று எனக்கு பிடித்த உணவை ஊட்டி விடுவார். அதனால் நான் அழ மாட்டேன். இது என் வாழ்நாளில் மறக்க முடியாத விஷயம் என்று பதிவிட்டுள்ளார்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!