உணவு மற்றும் விவசாயப் பொருட்களின் ஏற்றுமதிக்கு தடை விதித்த ஈரான்

#Food #Export #Iran #Agriculture #L4
Prasu
3 months ago
உணவு மற்றும் விவசாயப் பொருட்களின் ஏற்றுமதிக்கு தடை விதித்த ஈரான்

அனைத்துவகையான உணவு மற்றும் விவசாயப் பொருட்களின் ஏற்றுமதிக்கு ஈரான் தடைவிதித்துள்ளதாக ஈரானிய ஏற்றுமதி கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. 

நாட்டில் நிலவும் போர் சூழல் மற்றும் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில், மக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களின் இருப்பை உறுதி செய்ய ஈரான் அரசு இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளது.

இந்தத் தடை நாடு முழுவதும் உள்ள அனைத்து சுங்க அதிகாரிகளுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தடைக்கான காலக்கெடு குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. இதனால் மறுஅறிவிப்பு வரும்வரை இந்த தடை அமலில் இருக்கும் என கூறப்படுகிறது.

முன்னதாக, உருளைக்கிழங்கு, அதைத் தொடர்ந்து தக்காளி, பேரீச்சம்பழம் மற்றும் முட்டை போன்ற குறிப்பிட்ட பொருட்களுக்கு மட்டும் தற்காலிகத் தடைகள் விதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4