இன்று முதல் பாராளுமன்றத்தை கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு!

#SriLanka #Sri Lanka President #Ranil wickremesinghe #Parliament #government #sri lanka tamil news #Lanka4
Mayoorikka
2 years ago
இன்று முதல் பாராளுமன்றத்தை கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு!

இன்று முதல் பாராளுமன்றத்தை கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உள்ளது. 

அரசியலமைப்பின் விதிகளின்படி, பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு கூட்டப்பட்டு இரண்டரை வருடங்கள் நிறைவடைந்ததன் பின்னர் ஜனாதிபதிக்கு பாராளுமன்றத்தை கலைக்கும் அதிகாரம் உள்ளது.

9வது பாராளுமன்றத்தின் தொடக்க அமர்வு ஆகஸ்ட் 20, 2020 அன்று நடைபெற்றது. இதன்படி, இவ்வருடம் பெப்ரவரி 20ஆம் திகதி நள்ளிரவு 12 மணிக்குப் பின்னர், நாடாளுமன்றத்தின் ஆயுட்காலம் இரண்டரை வருடங்களைத் தாண்டுவதோடு, அதற்கேற்ப நாடாளுமன்றத்தைக் கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இருக்கும்.

இதேவேளை, பாராளுமன்றம் இன்று காலை 09.30 மணிக்கு மீண்டும் கூடவுள்ளது. இன்று முதல் வெள்ளிக்கிழமை வரை, தினமும் காலை 09:30 மணி முதல் மாலை 05:30 மணி வரை, நாடாளுமன்றத்தில் கூட்டங்கள் நடைபெற உள்ளன.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!