பசில் ராஜபக்ஷவிற்கும், பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினர்களுக்கும் இடையிலான விசேட சந்திப்பு
#Basil Rajapaksa
#Gotabaya Rajapaksa
#Mahinda Rajapaksa
#Lanka4
#sri lanka tamil news
#Tamilnews
Kanimoli
2 years ago

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷவிற்கும், பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினர்களுக்கும் இடையிலான விசேட சந்திப்பு இன்று(21) பொதுஜன பெரமுனவின் நெலும் மாவத்தையில் உள்ள உத்தியோகப்பூர்வ அலுவலகத்தில் இடம்பெறவுள்ளது.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் முதலாவது தேர்தல் பிரசாரக் கூட்டத்தை எதிர்வரும் வெள்ளிக்கிழமை அநுராதபுரத்தில் நடத்த தீர்மானிக்கப்பட்டடிருந்தது.
தபால்மூல வாக்கெடுப்பு பிற்போடப்பட்டதை தொடர்ந்து மார்ச் மாதம் 09 ஆம் திகதி உள்ளூராட்சிமன்றத் தேர்தல் குறித்து நிச்சயமற்ற தன்மை காணப்படுகிறதால், தேர்தல் பிரசார கூட்டம் தொடர்பில் ஒரு தீர்மானத்தை இன்று எடுக்க அவதானம் செலுத்தப்பட்டுள்ளது என பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.



