கோப்பாயில் பூட்டியிருந்த வீட்டுக் கதவினை உடைத்து 16 தங்கப் பவுண் நகைகள் திருட்டு

#Death #Arrest #Police #Jaffna #Lanka4
Kanimoli
2 years ago
கோப்பாயில்  பூட்டியிருந்த வீட்டுக் கதவினை உடைத்து 16 தங்கப் பவுண் நகைகள் திருட்டு

கோப்பாய் கட்டப்பிராய் பகுதியில் உள்ள பூட்டியிருந்த வீட்டுக் கதவினை உடைத்து உள்நுழைந்த திருடர்கள் 16 தங்கப் பவுண் நகைகளை திருடிச் சென்றுள்ளமை தொடர்பில் முறைப்பாடு பதியப்பட்டுள்ளது என கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது என்று வீட்டின் உரிமையாளரான ஓய்வுபெற்ற ஆசிரியை முறைப்பாடு வழங்கியுள்ளார் என்று பொலிஸார் கூறினர்.இரண்டுநாட்கள் வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் சென்றிருந்ததாக அவர் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் தடயவியல் மற்றும் புலன் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!