30 குண்டுகள் முழங்க....தமிழ்நாடு காவல்துறை சார்பில் இறுதி மரியாதையோடு பெசன்ட் நகரில் உள்ள மின் மயானத்தில் வாணி ஜெயராம் உடல் தகனம்
#Cinema
#Death
#India
Prabha Praneetha
2 years ago

பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் நேற்று சென்னையில் உள்ள தனது வீட்டில் தவறி விழுந்து உயிரிழந்தார்.
வாணி ஜெயராம் மறைவுக்கு தலைவர்கள், திரையுலகினர், ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அவரது உடல் சென்னை, பெசன்ட் நகரில் உள்ள மின் மயானத்தில் தகனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது.
பின்னர் காவல்துறை சார்பில் 10 காவலர்கள் 3 சுற்றுகளாக 30 குண்டுகள் முழங்க இறுதி மரியாதை செலுத்தினர்.
இந்நிலையில் குடும்பத்தினர் முன்னிலையில் வாணி ஜெயராமின் உடல் பெசன்ட் நகரில் உள்ள மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.



