விஜயின் 'லியோ' டைட்டிலை ட்ரோல் பண்ணும் நெட்டிசன்கள்

விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள தளபதி 67 படத்தின் டைட்டில் 'லியோ' என வெளியாகி இணையத்தில் கலக்கி வருகிறது,யாரும் யுவிக்காத வகையில் டைட்டிலை படக்குழு அறிவித்துள்ளதால் விஜய் ரசிகர்கள் மத்தியில் கொண்டாட்டத்தை ஏற்படுத்தி உள்ளது.லியோ டைட்டில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்று வரும் நிலையில் நெட்டிசன்களை இந்த டைட்டிலை கலாய்த்து தள்ளி வருகின்றனர். மாஸ்டர் படத்தை தொடர்ந்து இரண்டாவது முறையாக விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் மீண்டும் இணைந்துள்ளனர் கோலிவுட் சினிமா அதிகமாக எதிர்பார்த்த படமாக தளபதி 67 உருவாக்கி வருகிறது, இப்படத்தின் லோகேஷ் கனகராஜன் LCU எனப்படும் லோகேஷ் சினிமா டிக்கெட் யுனிவர்சல் இருக்குமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகிறது.
இந்நிலையில் கடந்த மூன்று நாட்களாக தளபதி 67 படம் குறித்த அப்டேட்கள் இணையத்தை கலக்கி வருகிறது இந்த வகையில் நேற்றைய தினம் டைட்டில் வெளியாகி இணையத்தில் ட்ரெண்டிங் ஆக உள்ளது, மேலும் டைட்டில் அறிவிப்பதற்காக வெளியிட்டுள்ள 2.49 நிமிடம் ஓடும் ப்ரோமோ வீடியோவில் சைலன்டாக ஆரம்பித்து விஜய் பார்வையிலே மிரட்டி உள்ளார், இறுதியில் ப்ளடி ஸ்வீட் என்ற விஜய் பேசும் வசனமும் மாஸாக உள்ளது என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
இதனிடையே தளபதி 67 டைட்டிலை ரஜினியின் ஜெயிலர் பட ப்ரோமோவை போன்று, நாகார்ஜுனா நடிப்பில் வெளியான கோஸ்ட் படத்தின் டைட்டில் வீடியோவை போன்று இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றன அதே ட்ரெய்லர் அதே வாடகை என அஜித் ரசிகர்கள் லியோ வீடியோவை கிணறுடித்து செய்து வருகின்றனர், இந்த டைட்டிலைட் ரோல் செய்தும் பல பதிவுகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனால் விஜயின் ரசிகர்கள் அவர்களுக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர்.



