நாலு வருடம் காக்க வைத்த அஜித்துக்கு விஷ்ணுவர்தன் கொடுத்த பதிலடி.

துணிவு படத்திற்கு பிறகு அஜித் நடிக்கும் ஏகே 62 படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவதாக சொல்லப்பட்டது. ஆனால் விக்னேஷ் சிவன், அஜித் காமினேஷன் கிட்டத்தட்ட ட்ராப் ஆனது. அடுத்து லைக்கா மற்றும் அஜித் இணைந்து இயக்குனர் விஷ்ணுவர்தனை நாடி இருக்கின்றனர்.
ஆனால் விஷ்ணுவர்தன் இப்பொழுது அதர்வா தம்பியை வைத்து ஒரு படம் பண்ணிக் கொண்டிருக்கிறார். அதுமட்டுமின்றி ரன்பீர் கபூரை ஹிந்தியில் ஒரு படம் பண்ண போகிறார். இவருடைய இயக்கத்தில் சமீபத்தில் வெளியான ஷேர்ஷா படம் ஹிந்தியில் நல்லா போனதால், விஷ்ணுவர்தனுக்கு அங்கே ஒரு மார்க்கெட் உருவாகி உள்ளது.
இப்பொழுது லைக்கா மற்றும் அஜித்துக்கு விஷ்ணுவர்தன் டைம் இல்லை என்று கூறிவிட்டார். ஏனென்றால் இவர் 2015 ஆம் ஆண்டு ஆர்யா நடித்த யட்சன் என்ற படத்தை இயக்கி அதன்பின் பில்லா 2, ஆரம்பம் படங்களைத் தொடர்ந்து மீண்டும் அஜித்தை வைத்து ஒரு படம் இயக்குவதாக இருந்தது.
ஆனால் ஒரு சில காரணத்தினால் அஜித் மற்றும் விஷ்ணுவர்தன் இருவரும் மறுபடியும் இணைய முடியாமல் போனது. ஆனால் அஜித்திற்காக சுமார் நான்கு வருடம் விஷ்ணுவர்தன் காத்திருக்கின்றார். அந்த சமயத்தில் அவர் எந்த படத்தையும் இயக்காமல் அவருக்காகவே ஒரு கதை தயாரித்து வைத்திருந்திருக்கிறார்.
அப்போதெல்லாம் கண்டுகொள்ளாத அஜித் இப்போது விக்னேஷ் சிவனை கழட்டி விட்ட பிறகு விஷ்ணுவர்தன் ஞாபகம் வந்துவிட்டது. ஆனால் விஷ்ணுவர்தன் நான்கு வருட இடைவெளிக்குப் பிறகு ஹிந்தி படங்களை இயக்கி ஹிட் கொடுத்தார். இருப்பினும் அஜித்தால் நான்கு வருடம் வீணாய் போனதை நினைத்து இப்போதும் விஷ்ணுவர்தன் கவலைப்படுகிறார்.
ஓவரா ஏங்க விட்ட அஜித்துக்கு ‘வாழ்க்கை ஒரு வட்டம்’ என்பதை நிரூபிக்கவே, தாமாக வந்த ஏகே 62 பட வாய்ப்பு வேண்டாம் என விஷ்ணுவர்தன் தட்டி கழித்தது தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பாக பேசப்படுகிறது. இப்போது ஏகே 62 படத்தை இயக்குனர் மகிழ் திருமேனி இயக்குகிறார். விஜய்க்காக சில வருடங்களுக்கு முன்பு மகிழ் திருமேனி தயார் செய்த கதையில் தான் தற்போது அஜித் நடிப்பதாகவும் சொல்லப்படுகிறது.



