லாபத்தை அதிகரிக்கும் நோக்கத்தில் 6000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய உள்ள பிலிப்ஸ் நிறுவனம்
#world_news
#Lanka4
Prasu
2 years ago

டச்சு சுகாதார தொழில்நுட்ப நிறுவனமான பிலிப்ஸ் அதன் லாபத்தை அதிகரிக்கும் நோக்கத்தில் 6000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்காக 6000 பணிகளை அகற்றுவதாக பிலிப்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. அந்த நிறுவனம் சந்தை மதிப்பில் 70% வீழ்ச்சி அடைந்த சுவாச சாதனங்களை திரும்ப பெற்றதைத் தொடர்ந்து இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
மேலும் 6 ஆயிரம் பணிகளில் பாதி வேலைகள் இந்த வருடம் குறைக்கப்படும் எனவும் மீதமுள்ள வேலைகள் 2025 ஆம் வருடத்திற்குள் குறைக்கப்படும் எனவும் அந்த நிறுவனம் கூறியுள்ளது.
அதேபோல் புதிய மறு சீரமைப்பு கடந்த அக்டோபர் மாதம் அதன் பணியாளர்களை 5% அல்லது 4000 வேலைகளை குறைப்பதற்காக அறிவிக்கப்பட்ட திட்டத்தின் கீழ் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள திட்டம் வருவதாகவும் கூறப்படுகிறது.



