பாலிவுட்டில் பிரபலமாக இருக்கக்கூடிய நடிகர்கள் தங்களுக்கு என்று பல லட்சங்கள் கொட்டிக் கொடுத்து பவுன்சர்களை வைத்துள்ளனர்

அரசியல் பிரமுகர்கள் தொடங்கி இன்றைய சினிமா பிரபலங்கள் வரையிலும் தங்களுக்கு என்று தனி பவுன்சர் கூட்டத்தை வைத்துள்ளனர். இந்நிலையில் பாலிவுட்டில் பிரபலமாக இருக்கக்கூடிய நடிகர்கள் தங்களுக்கு என்று பல லட்சங்கள் கொட்டிக் கொடுத்து பவுன்சர்களை வைத்துள்ளனர். அந்த வகையில் பாடி பில்டருக்கு என்று கொட்டிக் கொடுக்கும் 6 நடிகர்களை இங்கு காணலாம்.
சல்மான் கான்: பாலிவுட்டில் மிகவும் பிரபலமாக இருக்கக்கூடிய நடிகர்களில் ஒருவர் சல்மான் கான். இவருக்கு என்று தனியாக ஹீரா என்ற பாடி பில்டர் உள்ளார். இவர் தோற்றத்தில் பார்ப்பதற்கு அர்னால்டு போன்று கம்பீரமாக தோற்றம் அளிக்ககூடியவர். தற்பொழுது இவர் சல்மான் கான் இடம் இருந்து பாடி பில்டராக இருப்பதற்கு 15 லட்சம் வரை சம்பளம் பெறுகிறார்.
ஷாருக்கான்: ஹிந்தியில் தயாரிப்பாளர், நடிகர் மற்றும் நிகழ்ச்சி தொகுப்பாளர் என பன்முக திறமைகளைக் கொண்டவர் ஷாருக்கான். பாலிவுட்டில் மாஸ் ஹீரோவாக இருக்கக்கூடிய இவருக்கென்று ரவி சிங் என்னும் மெய் காப்பாளர் உள்ளார். இவரும் ஷாருக்கான் இடம் இருந்து 15 லட்சம் வரை பாடி பில்டர்காக இருப்பதற்கு சம்பளமாக வாங்குகிறார்.
அமிதாபச்சன்: ஹிந்தி திரைப்பட உலகில் டாப் ஹீரோக்களில் ஒருவர் அமிதாபச்சன். இவர் பாலிவுட் திரை உலகில் முக்கிய நட்சத்திரங்களில் ஒருவராக இருப்பதால் இவருக்கென்று ஒரு பவுன்சர் கூட்டமே உள்ளது. அதிலும் ஜிதேந்திர சிந்து எனும் பாடி பில்டர் நீண்ட காலமாக இவருடன் இருக்கிறார். இவர் அமிதாப்பச்சன் இடம் பவுன்சராக இருப்பதற்கு 12.5 லட்சம் வரை சம்பளமாக பெறுகிறார்.
அக்ஷய் குமார்: கோலிவுட்டில் 2.0 படத்தின் மூலம் அறிமுகமான நடிகர் அக்க்ஷய் குமார். இவருக்கென்று தனியாக முரட்டுத்தனமான தோற்றத்துடன் கூடிய ஷரோஸ் தேலே என்னும் மெய் காப்பாளர் உள்ளார். இவர் அக்ஷய் குமாருக்கு பாடி பில்டர் ஆக இருப்பதற்கு மட்டும் 10 லட்சம் வரை சம்பளமாக வாங்குகிறார்.
டைகர் ஷெராப்: பாலிவுட் மற்றும் தமிழ் திரைப்பட நடிகர் ஜாக்கி ஷெராப்வின் மகன் ஆவார். இவர் ஹிந்தி படங்களில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இவரின் செக்யூரிட்டிக்காக யுவராஜ் கோர்படே என்னும் பாடி பில்டர் உள்ளார். டைகர் ஷெராப் அவர்களுக்கு பவுன்சராக இருப்பதற்கு இவர் 17 லட்சம் வரை சம்பளமாக பெறுகிறார்.



