உக்ரைனுக்கு மேலும் 2.5 பில்லியன் டாலர் ராணுவ உதவி வழங்குவதாக அறிவித்த அமெரிக்கா

#Ukraine #Russia #War #America #Weapons
Prasu
2 years ago
உக்ரைனுக்கு மேலும் 2.5 பில்லியன் டாலர் ராணுவ உதவி வழங்குவதாக அறிவித்த அமெரிக்கா

ரஷியா உடனான போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா பெரும் பக்கபலமாக இருந்து வருகிறது. உக்ரைன் மீது ரஷியா போர் தொடுப்பதற்கான சூழல் தென்பட்டது முதல் இருந்தே உக்ரைனுக்கு அமெரிக்கா ராணுவ உதவிகளை வழங்கி வருகிறது. 

அமெரிக்கா வழங்கி வரும் அதிநவீன ஆயுதங்களை கொண்டே உக்ரைன் ராணுவம் கிட்டத்தட்ட ஓர் ஆண்டாக ரஷிய படைகளை துணிவுடன் எதிர்த்து நிற்கிறது. 

இந்நிலையில், உக்ரைனுக்கு மேலும் 2.5 பில்லியன் டாலர் மதிப்பிலான ராணுவ உதவியை வழங்க அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தலைமையிலான நிர்வாகம் ஒப்புதல் வழங்கியுள்ளது. 

இதுதொடர்பாக, அமெரிக்க ராணுவ அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2021-ம் ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் இருந்து உக்ரைனுக்கு ராணுவ தளவாடங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. 

அந்த வகையில் தற்போது 30-வது தொகுப்பாக ராணுவ தளவாடங்கள் வழங்கப்பட்டவுள்ளன. இந்த புதிய தொகுப்பில் 59 பிராட்லி காலாட்படை சண்டை வாகனங்கள், 90 ஸ்ட்ரைக்கர் கவச வாகனங்கள், வான் பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் அதிநவீன பீரங்கி மற்றும் ராக்கெட் அமைப்புகள் உள்ளிட்டவை அடங்கும் என தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!