அலுவலகக் காவலில் வைக்கப்பட்டிருந்த கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் பொலிஸாரால் விடுவிப்பு
#Police
#Colombo
#Hospital
Prathees
2 years ago

அலுவலகக் காவலில் வைக்கப்பட்டிருந்த கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் டொக்டர் ருக்ஷான் பெல்லான பொலிஸ் அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளார்.
சுகாதாரப் பணியாளர்கள் மருத்துவமனையின் சில சுகாதாரப் பணியாளர்கள் அலுவலக நேரத்தில் போதைப்பொருள் உபயோகிக்கும் வீடியோவை பிரதிப் பணிப்பாளர் வெளியிட்டிருந்தார்.
இதனைத் தொடர்ந்து இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து சுகாதாரத்துறையினர் மருத்துவமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்
அவர்கள் டாக்டர் ருக்ஷான் பெல்லானாவின் அலுவலகத்திற்குச் சென்று அவரை அலுவலகக் காவலில் வைத்தனர்.
அதனையடுத்துஇ அங்கு வந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் சுகாதார அமைச்சின் சுகாதார பணி உதவியாளர்களிடம் கலந்துரையாடியதன் பின்னர் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளரை மீட்டனர்.



