யுக்ரெய்ன் ஜனாதிபதியின் ஆலோசகர் திடீர் பதவி விலகல்!

யுக்ரெய்ன்- டினிப்ரோவில் உள்ள கட்டிடத்தை தாக்கி 44 பொதுமக்களை கொன்ற ரஷ்ய ஏவுகணையை, யுக்ரெய்னிய படையினர், சுட்டு வீழ்த்தியதாக கூறிய, யுக்ரெய்ன் ஜனாதிபதியின் ஆலோசகர் ஒலெக்ஸி அரெஸ்டோவிச், தனது பதவியில் இருந்து விலகியுள்ளார்.
தமது தகவல் அடிப்படை பிழை என்று கூறி அதற்கு மன்னிப்பையும் அவர் கோரியுள்ளார்.
அசல் கருத்து நாட்டில் பரவலான கோபத்தை ஏற்படுத்தியது, மேலும் உக்ரைனைக் குற்றம் சாட்ட ரஷ்ய அதிகாரிகளால் பயன்படுத்தப்பட்டது.
இந்த ஆலோசகர் யூடியூப்பில் போர் தொடர்பான தினசரி புதுப்பிப்புகளை வழங்கி வருவதால், பொதுமக்களால் நன்கு அறியப்படுபவராக உள்ளார்.
இந்தநிலையில், அரெஸ்டோவிச்சின் பதவி விலகல் முடிவு குறித்து யுக்ரெய்ன் ஜனாதிபதி வோலோடிமிர் செலென்ஸ்கி இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை.
கடந்த சனிக்கிழமை ஏவுகணைத் தாக்குதல் டினிப்ரோவில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தைத் தாக்கிய சில மணிநேரங்களுக்குப் பின்னர், அரெஸ்டோவிச் ஆரம்பத்தில் ரஷ்ய ஏவுகணை யுக்ரேனிய வான் பாதுகாப்புப் படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்ட பின்னர் கட்டிடத்தின் மீது வீழ்ந்ததாகத் தோன்றியது என்று குறிப்பிட்டிருந்தார்.
எனினும் அந்த கூற்று தவறானது என்ற விடயம் வெளிப்படுத்தப்பட்ட நிலையிலேயேயுக்ரெய்ன் ஜனாதிபதியின் ஆலோசகர் ஒலெக்ஸி அரெஸ்டோவிச் தமது பதவி விலகலை அறிவித்துள்ளார்.



