மோடியின் அழைப்பை ஏற்ற கனேடிய பிரதமர்!
#SriLanka
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
1 month ago
இந்தியாவிற்கு வருகை தருமாறு கனேடிய பிரதமர் மார்க் கார்னிக்கு இந்திய பிரதமர் அழைப்பு விடுத்துள்ளார்.
குறித்த அழைப்பை மார்க் கார்னி ஏற்றுக்கொண்டுள்ளார். இந்த தகவலை கனடா பிரதமர் அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது.
ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்ற இருதரப்பு பேச்சுவார்த்தைகளின் போது இரு நாட்டு தலைவர்களும் சந்தித்துக்கொண்ட நிலையில், அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
பேச்சுவார்த்தைகளின் போது வர்த்தகம், முதலீடு, தொழில்நுட்பம் மற்றும் எரிசக்தி போன்ற துறைகளில் உறவுகளை மேம்படுத்துவதோடு, பாதுகாப்பு மற்றும் விண்வெளித் துறைகளில் ஆழமான ஒத்துழைப்புக்கான திறனைத் திறக்கவும் இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர்.
(வீடியோ இங்கே )
அனுசரணை
