தீபாவளி வாழ்த்து தெரிவித்த தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்
#Tamil Nadu
#Festival
#LANKA4
#Vijay
#ChiefMinister
#DIwali
#L4
Prasu
44 minutes ago
தமிழ்நாட்டில் தீபாவளி பண்டிகை பாரம்பரிய உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது.
இதையொட்டி, மாநில அரசு மற்றும் காவல்துறை சார்பில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன; மருத்துவத் துறையும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
பல்வேறு தலைவர்கள் பொதுமக்களுக்குத் தீபாவளி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.
அந்தவகையில், தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் பண்டிகையை முன்னிட்டு மக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
மக்கள் தீபாவளியை மகிழ்ச்சியுடன் கொண்டாட வாழ்த்து தெரிவித்ததோடு, பாதுகாப்பான முறையில் பண்டிகையைக் கொண்டாடி, மற்றவர்களுடன் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ளுமாறு முதலமைச்சர் கேட்டுக்கொண்டார்.