திடீர் உடல்நலக்குறைவால் நடிகர் விக்ரம் மருத்துவமனையில் அனுமதி
Nila
2 years ago

நடிகர் விக்ரம் உடல்நலக் குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.தமிழ் சினிமாவின் முக்கிய நடிகராக வலம் வருபவர் நடிகர் விக்ரம். மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள பொன்னியின் செல்வன் படத்தின் டீசர் இன்று மாலை வெளியிடப்பட இருக்கிறது.
இந்நிலையில், நடிகர் விக்ரமுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் என தகவல் வெளியானது.
இது தொடர்பாக விக்ரம் தரப்பில் விசாரித்தபோது, காய்ச்சல் காரணமாக நேற்று இரவு ஐசியூவில் அனுமதிக்கப்பட்டிருந்தவர், இன்று காலை சாதாரண பிரிவிற்கு மாற்றப்பட்டுள்ளார். மற்றபடி அவருக்கு மாரடைப்பு என வெளியாகும் செய்திகளில் உண்மையில்லை. தற்போது விக்ரம் நலமுடன் இருக்கிறார் என தெரிவித்தனர்.



