இன்றைய வேத வசனம் 12.06.2022: தேவன் ஆதிமுதல் அந்தம்மட்டும் செய்துவரும் கிரியையை மனுஷன் கண்டுபிடியான்

Prathees
2 years ago
இன்றைய வேத வசனம் 12.06.2022: தேவன் ஆதிமுதல் அந்தம்மட்டும் செய்துவரும் கிரியையை மனுஷன் கண்டுபிடியான்

அவர் சகலத்தையும் அதினதின் காலத்திலே நேர்த்தியாகச் செய்திருக்கிறார்; உலகத்தையும் அவர்கள் உள்ளத்திலே வைத்திருக்கிறார்; ஆதலால் தேவன் ஆதிமுதல் அந்தம்மட்டும் செய்துவரும் கிரியையை மனுஷன் கண்டுபிடியான்.  பிரசங்கி 3:11

எனது நண்பரின் புத்தக அலமாரியில், லியோ டால்ஸ்டாயின் “வார் அண்ட் பீஸ்” (War and Peace) புத்தகத்தின் பெரிய தொகுப்பை நான் பார்த்தபோது, “நான் அதை இன்னும் முழுவதுமாய் படித்து முடிக்கவில்லை” என்று ஒப்புக்கொண்டேன். “நான் என் ஆசிரியர் பணியிலிருந்து ஓய்வுபெற்றபோது, “இப்போது நீங்கள் இறுதியாக அதைப் படிக்க நேரம் கிடைக்கும்” என்று சொல்லி என் நண்பர் ஒருவர் அப்புத்தகங்களை எனக்கு பரிசாகக் கொடுத்தார்” என்று மார்டி கூறினார்.

பிரசங்கி 3ஆம் அதிகாரத்தின் முதல் எட்டு வசனங்கள், வாழ்க்கையின் முக்கியமான சில உணர்வுகளின் செயல்பாடுகளை தாளத்தோடு எடுத்துரைக்கிறது. வாழ்க்கையின் எந்த கட்டத்தில் நாம் இருந்தாலும், நாம் செய்ய விரும்பும் அனைத்தையும் செய்ய நேரத்தைக் கண்டுபிடிப்பது பெரும்பாலும் கடினம். நமது நேரத்தை நிர்வகிப்பதைப் பற்றிய ஞானமான முடிவுகளை எடுக்க, ஒரு திட்டத்தை ஏற்படுத்திக்கொள்வது உதவியாக இருக்கும் (சங்கீதம் 90:12).

ஒவ்வொரு நாளும் தேவனுடன் நாம் நேரம் செலவிடுவது நமது ஆவிக்குரிய வாழ்க்கைக்கு ஆரோக்கியமானது. ஆக்கப்பூர்வமான வேலையைச் செய்வது நமது ஆவிக்கு நல்லது (பிரசங்கி 3:13). நமக்கான தேவனின் நோக்கத்தை நிறைவேற்ற தேவனைச் சேவிப்பதும் மற்றவர்களுக்கு உதவுவதும் அவசியம் (எபேசியர் 2:10). ஓய்வெடுப்பது என்பது வீண் அல்ல; அது நமது உடலுக்கும் ஆவிக்கும் புத்துணர்ச்சி அளிக்கிறது.

நிச்சயமாக, நம்மில் அநேகருக்கு முக்கியமாக தோன்றும் காரியங்களில் நேரத்தை செலவிடுவது எளிதாக இருக்கும். ஆனால் பிரசங்கி 3:11, தேவன் நம் இருதயங்களில் “நித்தியத்தை” வைத்திருக்கிறார் என்று கூறுகிறது. நித்தியமான காரியங்களுக்கு முன்னுரிமை கொடுக்க நினைவூட்டுகிறது. அது தேவனுடைய நித்தியத்தின் பார்வையை துவக்கமுதல் இறுதிவரை நம் கண்களுக்கு முன்பாக கொண்டு நிறுத்துகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!