கோலாகலமாக நடைபெற்ற நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமணப் புகைப்படம்!

நடிகர், பாடலாசிரியர், இயக்குனர் என பன்முகத்திறமை கொண்ட விக்னேஷ் சிவனும், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையான நயன்தாராவும் கடந்த ஆறு வருடங்களாக காதலித்து வந்தனர். தொடர்ந்து சமூக வலைதளங்களில் தங்களின் ஜோடியான புகைப்படங்களை இருவரும் பகிர்ந்து வந்த நிலையில் எப்போது திருமணம் என்று ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பினர்.
அதன்பின், ரசிகர்களுக்கு பதிலளிக்கும் விதமாக ஜூன் 9-ஆம் தேதி சென்னை மகாபலிபுரத்தில் உள்ள ஒரு ரெசார்ட்டில் விமர்சையாக திருமணம் நடக்கவுள்ளதாக விக்னேஷ் சிவன் செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார்.
நயன்தாரா-விக்னேஷ் சிவனின் திருமணம் இன்று காலை 8:30 மணியளவில் மகாபலிபுரத்தில் உள்ள ஷேர்டன் ஹோட்டலில் குடும்ப உறவினர்கள் முன்னிலையில் கோலாகலமாக தொடங்கியது. பின்னர் காலை 10.25 மணியளவில் நயன்தாராவின் கழுத்தில் விக்னேஷ் சிவன் தாலியை கட்டினார்.
இவர்களது திருமணத்தில் முன்னணி திரைப்பிரபலங்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். நயன்தாரா - விக்னேஷ் சிவன் இந்நிலையில் இவர்களின் திருமண புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து விக்னேஷ் சிவன் நெகிழ்ந்து பதிவிட்டுள்ளார். இவர்களது திருமண புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
On a scale of 10…
— Vignesh Shivan (@VigneshShivN) June 9, 2022
She’s Nayan & am the One ☝️☺️??
With God’s grace , the universe , all the blessings of our parents & best of friends
Jus married #Nayanthara ☺️?? #WikkiNayan #wikkinayanwedding pic.twitter.com/C7ySe17i8F



