5 மாத ஆண் குழந்தை தாயுடன் சேர்ந்து உடற்பயிற்சி; பரபரப்பு செய்தி...

5 மாத ஆண் குழந்தை தாயுடன் சேர்ந்து உடற்பயிற்சி; பரபரப்பு செய்தி...

உடலை சீராக வைத்து கொள்வதற்கான பயிற்சி அளிப்பவராக மிச்சேலே இருந்து வருகிறார். இவரது 5 மாத ஆண் குழந்தை தனது வயதில் அதிக சுட்டியாக செயல்படுகிறது. மிச்சேலே உடற்பயிற்சி மேற்கொள்ளும்போது, அவருடன் சேர்ந்து அந்த குழந்தையும் உடற்பயிற்சி செய்கிறது.

மிச்சேலே தனது முன்னங்கைகளை தரையில் வைத்தபடி, பிளாங் எனப்படும் உடற்பயிற்சியை மேற்கொள்கிறார். குப்புற படுத்திருந்த அவரது மகன், மிச்சேலேவை பார்த்து தனது உடலை மேலே எழுப்ப முயற்சி செய்து அதில் வெற்றியும் பெறுகிறது. ஒரு சில வினாடிகள் ஓட கூடிய இந்த வீடியோவில், குழந்தை இந்த வயதிலேயே உடற்பயிற்சியை பார்த்து, பின் கற்று கொண்டு அதனை செய்கிறது.

ஆச்சரியப்படும் வகையில் ஒரு தேர்ந்த, பயிற்சி பெற்ற நபரை போன்று அது செயல்படுவது காண்போரை பரவசத்தில் ஆழ்த்துகிறது. இதனை தனது இன்ஸ்டாகிராமில் மிச்சேலே பதிவிட்டு உள்ளார். எனது 5 மாத குழந்தை சில புதிய விசயங்களை கற்று கொண்டிருக்கிறது என அதில் மிச்சேலே தெரிவித்து உள்ளார். இதனை 3.1 கோடிக்கும் மேற்பட்டோர் பார்வையிட்டு உள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!