அமெரிக்கா புறப்பட தயாராகும் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க!
#SriLanka
#America
#AnuraKumaraDissanayake
#Visit
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
1 month ago
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க நாளை (22) இரவு அமெரிக்காவிற்கு புறப்பட உள்ளார்.
இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி ஐக்கிய நாடுகள் சபையின் 80வது பொதுச் சபை அமர்வில் கலந்து கொள்ளவுள்ளதாகவும், புதன்கிழமை (24) உள்ளூர் நேரப்படி பிற்பகல் 3.15 மணிக்கு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையில் உரையாற்றவுள்ளதாகவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த விஜயத்தின் போது, ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் மற்றும் பல உலகத் தலைவர்களுடன் இருதரப்பு கலந்துரையாடல்களை நடத்தவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் வசிக்கும் இலங்கையர்களுடனான சந்திப்பிலும் ஜனாதிபதி பங்கேற்பார்.
இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவுடன் வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் உடன் வருவார்.
(வீடியோ இங்கே )
அனுசரணை
