மீண்டும் வேலைநிறுத்த போராட்டத்தை ஆரம்பித்த மின்சாரசபை ஊழியர்கள்!
#SriLanka
#strike
#ElectricityBoard
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
3 months ago
இலங்கை மின்சார சபை தொழிற்சங்கங்கள் இன்று நள்ளிரவு முதல் கொள்முதல் மற்றும் டெண்டர் செயல்முறைகளில் பங்கேற்பதைத் தவிர்ப்பதற்காக தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளன.
இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்பு செயல்பாட்டில் முறைசாரா முன்மொழிவுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்பு செயல்பாட்டில் முறைசாரா முன்மொழிவுகள், ஊழியர்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தும் சட்டவிரோத நடவடிக்கைகள், நிலுவையில் உள்ள ஊக்கத்தொகை வழங்குதல் மற்றும் உரிய பதவி உயர்வுகளை வழங்குதல் உள்ளிட்ட 16 கோரிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
(வீடியோ இங்கே )
அனுசரணை
