ஐக்கிய அரபு அமீரகம் செல்லும் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன்
#President
Prasu
2 years ago

ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைவர் ஷேக் கலிஃபா பின் ஷயத் அல் நயான், உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 73. உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அதிபர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அதிபர் மாளிகை அறிவித்தது.
இந்த நிலையில், அதிபரின் மறைவுக்கு பின் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு பயணம் செய்யவுள்ளார் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன். இங்கிலாந்து பிரதமரின் இந்த வருகையானது இரு நாடுகளுக்கும் இடையிலான பிணைப்பை மேலும் வலுப்படுத்தும் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து பிரதமர் கடைசியாக கடந்த மார்ச் மாதம் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.



