யாழில் குற்றச் செயல்களுடன் தொடர்புடைய நபர் கட்டுநாயக்கவில் கைது!
#SriLanka
#Jaffna
#Arrest
#Crime
#Katunayaka
Mayoorikka
1 hour ago

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பல்வேறு வாள்வெட்டுச் சம்பவங்கள் தொடர்பில் பொலிஸாரால் நீண்ட காலமாக தேடப்பட்டு வந்த சந்தேக நபர் ஒருவர் செவ்வாய்க்கிழமை (23) கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியைச் சேர்ந்த இந்த நபர் நீண்ட காலமாக தலைமறைவாகியிருந்த நிலையில் நாட்டை விட்டு தப்பிச் செல்வதற்கு முயன்ற வேளையே கைது செய்யப்பட்டுள்ளார்.
இதனையடுத்து, கைது செய்யப்பட்ட நபரிடம் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
(வீடியோ இங்கே )
அனுசரணை



