ஏற்று நீர்ப்பாசனத் திட்டப்பணிகளை பார்வையிட்டர் - சிறீதரன் எம்பி!

கிளிநொச்சி மாவட்டத்தின் வட்டக்கச்சி, மாயவனூரில் அமைந்துள்ள புழுதியாறு குளத்தினுடைய ஏற்று நீர்ப்பாசனத் திட்டத்தின் பணிகளை நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற குழுவின் தலைவருமான சிவஞானம் சிறீதரன் அவர்கள் நேற்று முந்தினம் சென்று பார்வையிட்டார்.
வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் அமரர் சு.பசுபதிப்பிள்ளை அவர்களின் பெரும் முயற்சியினால் இந்த ஏற்று நீர்ப்பாசனத் திட்டம் முதலில் உருவாக்கப்பட்டது பின்பு அதற்கான மின்சார இணைப்புகளில் ஏற்பட்ட இடர்பாடு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த குறித்த பணியானது மாகாண சபையின் குறித்தொதுக்கப்பட்ட நிதியில் சுமார் 12 மில்லியன் ரூபாய் செலவில் சூரிய மின்கல மூலம் இயங்கும் நீர் பம்பிகள் மூலம் விவசாயிகளுக்கான உடனடி நீர் வழங்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது.
கிளிநொச்சி மாவட்ட நீர்ப்பாசனத் திணைக்களத்தின் ஊடாக நடைபெற்றுவரும் இச்செயற்திட்டத்தை, நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களுடன் கிளிநொச்சி கிழக்கு நீர்ப்பாசனத் திணைக்களத்தின் பணிப்பாளர் எந்திரி பிரகாஷ் கைலாயபிள்ளை கரைச்சி பிரதேச சபையின் உறுப்பினர் பொன்காந்தன், மாயனூர் கமக்கார அமைப்பின் தலைவர் ஜெகன், மற்றும் கமக்கார அமைப்பின் உறுப்பினர்கள் ஆகியோர் சென்று குறித்த பணிகளை பார்வையிட்டிருந்தனர்…
(வீடியோ இங்கே )
அனுசரணை



