நியூயார்க் சூப்பர் மார்க்கெட்டில் 10 பேர் சுட்டுக் கொலை- ஒருவர் கைது
#Death
Prasu
2 years ago
அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் உள்ள பஃபேலோ நகரில் செயல்பட்டு வரும் டாப்ஸ் சூப்பர் மார்க்கெட் கட்டிடத்திற்குள் நுழைந்த மர்மநபர் அங்கிருந்தவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளார்.
இதில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக சட்ட அமலாக்க அதிகாரிகள் கூறினர். உடனடியாக அந்த நபரை சுற்றி வளைத்த போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விசாரணை ஆரம்ப கட்டத்தில் இருப்பதாகவும், துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதன் நோக்கம் குறித்து அதிகாரிகள் இன்னும் தெளிவாக கண்டறியவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும், இனவெறியால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதா என்பது குறித்தும் ஆராய்ந்து வருவதாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.



