விண்வெளி நிலையம் அமைக்கும் பணிக்கு 3 வீரர்களை விண்வெளிக்கு அனுப்பும் சீனா!

Prasu
3 years ago
விண்வெளி நிலையம் அமைக்கும் பணிக்கு 3 வீரர்களை விண்வெளிக்கு அனுப்பும் சீனா!

விண்வெளியில் டியாங்காங் என்ற தனி விண்வெளி நிலையத்தை உருவாக்கும் பணியில் சீனா ஈடுபட்டுள்ளது. இதற்காக பல கட்டங்களாக வீரர்களை விண்வெளிக்கு அனுப்பி சீனா அங்கு பணிகளை மேற்கொண்டு வருகிறது.

ஏற்கனவே இதற்காக பல முறை விண்வெளிக்கு அனுப்பியுள்ள சீனா கடந்த வருடம் அக்டோபர் மாதம் ஷென்சோ 13 விண்கலத்தில் 3 விண்வெளி வீரர்களை அனுப்பியது.

அவர்கள் 3 பெரும் விண்வெளியில் இருந்தபடி பூமியில் உள்ள சீன வல்லுனர்களுடன் இணைந்து பணியாற்றி வந்தனர். 6 மாதங்கள் நிறைவடைந்த நிலையில் ஷென்சோ 13 குழுவினர்  மங்கோலியாவின் வடக்குப் பகுதியில் உள்ள கோபி பாலைவனத்தில் தரையிறங்கி சமீபத்தில் பூமிக்கு திரும்பினர்.

இந்த நிலையில் மீண்டும் அடுத்த கட்டமாக சீனா தனது புதிய விண்வெளி நிலையத்திற்கு மேலும் மூன்று விண்வெளி வீரர்களை ஜூன் மாதத்தில் அனுப்ப திட்டமிட்டுள்ளது.

இவர்கள் 3 பெரும் ஜூன் இந்த வருடம் இறுதிவரை அங்கு இருந்து பணியாற்றுவார்கள் என சீன விண்வெளி பொறியியல் அலுவலகத்தின் இயக்குனர் ஹாவ் சுன் தெரிவித்துள்ளார்.

ஷென்சோ 14 விண்கலத்தில் செல்லவுள்ள இவர்கள் விண்வெளி நிலையத்தின்   இரண்டு தொகுதிகளை சேர்க்கும் பணியில் ஈடுபடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!