ஜனநாயக வெளிப்பாட்டிற்கு ஆர்ப்பாட்டங்கள் முக்கியமானது - அமெரிக்க தூதுவர்
#United_States
#SriLanka
#Protest
Prasu
3 years ago

இலங்கை மக்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதற்கான உரிமையுள்ளது என அமெரிக்க தூதுவர் தெரிவித்துள்ளார்.
மிரிஹானவில் அமைந்துள்ள ஜானாதிபதியின் இல்லத்தினை முற்றுகையிட்டு பெரும்திரளான மக்கள் நேற்று முந்தினம் போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர்.
இந்தநிலையில் இதுதொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே அமெரிக்க தூதுவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
“இது ஜனநாயக வெளிப்பாட்டிற்கு அவசியமானது. நான் நிலைமையை உன்னிப்பாக அவதானிக்கின்றேன். எதிர்வரும் நாட்கள் அனைத்து தரப்பினருக்கும் பொறுமையை கொண்டுவரும் என கருதுகின்றேன்.
துயரத்தில் சிக்குண்டுள்ளவர்களிற்கு மிகவும் அவசியமான பொருளாதார ஸ்திரதன்மைiயும் நிவாரணத்தையும் கொண்டுவரும் எனவும் எதிர்பார்க்கின்றேன்.“ எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார் .



