தகவல் அறியும் உரிமைச் சட்டம் – இலங்கை

இலங்கையின் “தகவல் அறியும் உரிமைச் சட்டம்” (RTI Act) என்பது 2016ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஒரு முக்கிய சட்டமாகும். இது ஜனநாயகத்திற்குத் தேவையான திறந்த, பொறுப்பாளித்தன்மை கொண்ட நிர்வாகத்தை உறுதி செய்யும் ஒரு சட்டமாகும்.
இந்தச் சட்டத்தின் நோக்கங்கள்:
1. அரச நிறுவனங்களில் பொது செயல்பாடுகள் தொடர்பான தகவல்களை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் உரிமையை உறுதி செய்தல்.
2. பொறுப்பான மற்றும் வெளிப்படையான நிர்வாகம் உருவாக்குதல்.
3. கடமைப்பூண்டிய அதிகாரிகளின் செயல்களை கண்காணிக்க பொதுமக்களுக்கு வாய்ப்பு வழங்கல்.
4. ஊழல் தடுப்பு மற்றும் நல்லாட்சி உறுதி செய்தல்.
சட்டம் பொருந்தும் வரம்பு/எல்லை:-
தகவல் கோரலாம்:
அமைச்சுகள், அரச திணைக்களங்கள்
பிரதேச மற்றும் மாகாண சபைகள்
கல்வி நிறுவனங்கள், வைத்தியசாலைகள்
அரசு நிதி பெறும் தனியார் நிறுவனங்கள்
அரச நிறுவனங்களால் ஒப்பந்தம் பெற்றவர்களின் செயல்கள்
விலக்குகள் (Section 5):
தேசிய பாதுகாப்பு
வெளிநாட்டு உறவுகள்
நீதிமன்ற விசாரணைகள்
தனிநபர் இரகசியத்தன்மை
வணிக ரகசியங்கள்
தகவல் கோரும்போது பின்பற்றப்படும் நடைமுறைகள் :
1. அரச அமைப்பின் தகவல் அதிகாரியிடம் எழுத்துமூலம் அல்லது வாய்மொழியாக விண்ணப்பிக்கலாம்.
2. தகவல் 14 நாட்களுக்குள் வழங்கப்பட வேண்டும் (சில சமயங்களில் 21 நாட்கள்).
3. தரவுகள் இல்லையெனில் அதற்கான காரணம் எழுதித் தெரிவிக்க வேண்டும்.
உங்கள் கோரிக்கை மறுக்கப்பட்டால் :
1. தகவல் அதிகாரி மறுத்தால் – மேலதிக தகவல் அதிகாரியிடம் (Designated Officer) முறையிடலாம்
2. அதனையும் பின்பற்றி தீர்வு இல்லை என்றால் – தகவல் ஆணைக்குழுவில் (RTI Commission) முறையிடலாம்
3. பின்னர் – மீண்டும் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர முடியும்
தண்டனை விதிமுறைகள் :
தகவல் மறைப்பது, நாசம் செய்தல், தவறான தகவல் வழங்கல் போன்றவை சட்டவிரோதமாகும்.
இவை குற்றமாக நிரூபிக்கப்பட்டால், தண்டனை அல்லது நடவடிக்கை எடுக்கப்படும்.
தகவல் ஆணைக்குழு (RTI Commission):
5 உறுப்பினர்களைக் கொண்டது
பொதுமக்கள் மற்றும் ஊடகக் குழுக்களிடமிருந்து வரும் முறையீடுகளை விசாரிக்கிறது.
ஆண்டு கணக்குகள் மற்றும் செயல்பாடுகள் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட வேண்டும்.
இதன் பயன்பாடுகள்:
வளர்ச்சி திட்டங்கள் பற்றிய விவரங்கள்
நிதி ஒதுக்கீடு மற்றும் செலவுகள்
அரசு வேலைவாய்ப்பு மற்றும் இடமாற்ற விவரங்கள்
சுகாதாரம், கல்வி தொடர்பான அரசின் செயல்திறன்
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



