'கே.ஜி.எப்-2' திரைப்பட ட்ரெய்லரை வெளியிட்ட சூர்யா

கே.ஜி.எப். படத்தின் முதல் பாகம் கடந்த 2018-ம் ஆண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான நிலையில், தற்போது அப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி உள்ளது. பிரசாந்த் நீல் இயக்கத்தில் 'யாஷ்' ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில், அவருக்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்கிறார். மேலும் பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், அதீரா எனும் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
பின்னர் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக படத்தின் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டது. அதன்பின் இப்படம் இந்த ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. 'கே.ஜி.எப்-2' திரைப்படத்தின் டிரைலர் மார்ச் 27ஆம் தேதி மாலை 6.40 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி சரியாக அறிவித்தபடி டிரைலர் வெளியானது. தமிழ் டிரைலரை சூர்யாவும், தெலுங்கு டிரைலரை ராம் சரணும், இந்தி டிரைலரை ஃபர்ஹான் அக்தரும், மலையாள டிரைலரை பிரித்வி ராஜும் வெளியிட்டுள்ளனர். பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட இப்படத்தின் டிரைலரை ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கொண்டாடி வருகின்றனர்.
கே.ஜி.எப்-2 படத்தின் டிரைலர் வெளியிட்டு விழாவில் தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு கலந்துகொண்டார். அதில் அவர் பேசியது, தென்னிந்திய தயாரிப்பாளராக தமிழில் கே.ஜி.எப். 2 படத்தை வெளியிடுவதில் பெருமை படுகிறேன். முதல் பாகத்தை இந்தியாவில் உள்ள அனைத்து இடங்களில் கொண்டாடினார்கள். அதுபோல் இரண்டாம் பாகத்தையும் கொண்டாட தயாராக இருக்கிறார்கள் என்று கூறினார்.
Best wishes to our brothers who are experts in creating a magnum opus! Excited to release #KGFChapter2Trailer https://t.co/lpxCuAvLRV @thenameisyash@prashanthneel @vkiragandur @hombalefilms
— Suriya Sivakumar (@Suriya_offl) March 27, 2022



