மக்களின் அமோக ஆணையுடன் புதிய ஆட்சியமைத்தே தீருவோம் - சஜித் திட்டவட்டம்

#SriLanka #Sajith Premadasa
மக்களின் அமோக ஆணையுடன் புதிய ஆட்சியமைத்தே தீருவோம் - சஜித் திட்டவட்டம்

நாட்டு மக்களின் அமோக ஆணையுடன் புதிய ஆட்சியமைத்தே தீருவோம் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

"இந்த நாட்டு மக்கள் சரியான நேரத்தில் உரிய முடிவை எடுப்பார்கள். நாட்டை மீட்பதற்கான ஆணையை எங்களுக்கு வழங்குவார்கள். எனவே, ஆட்சி மாற்றம் என்பது பகல் கனவு கிடையாது.

நாட்டில் இன்று உணவுப் பாதுகாப்பு இல்லை. வாழ்வதற்காகப் போராட வேண்டிய நிலைமையே உள்ளது.

ஜனாதிபதியின் சர்வகட்சி மாநாட்டின் பின்னணியில் சூழ்ச்சி உள்ளது. இதை விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே ஏற்றுக்கொண்டுள்ளார்" - என்றார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!