இலங்கையில் எதிர்வரும் 50 வருடங்களுக்கு என்பிபி அரசாங்கமே ஆட்சி செய்யும்! அர்ச்சுனா

#SriLanka #government #Lanka4 #NPP #Archuna #SHELVAFLY
Mayoorikka
4 hours ago
இலங்கையில் எதிர்வரும் 50 வருடங்களுக்கு என்பிபி அரசாங்கமே ஆட்சி செய்யும்! அர்ச்சுனா

நாட்டில் இனி 50 வருடங்களுக்கு NPP யின் அரசாங்கமே ஆட்சியில் இருக்கும் என அர்ச்சுனா MP தெரிவித்துள்ளார்.

 நேற்றைய (07) நாடாளுமன்ற அமர்வு தொடர்பில் பதிவிடப்பட்டுள்ள முகநூல் பதிவிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.

 இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்டுள்ள அர்ச்சுனா, “ஜனாதிபதி நாடாளுமன்றத்திற்கு வருகைத்தந்து பல மணி நேரம் தொடர்ந்து உரையாற்றிக் கொண்டிருந்தார். அதை கேட்கும்போது ஐம்பது வருடங்களுக்கு தேசிய மக்கள் சக்தி, அரசாங்கத்தில் இருக்கும் போல தோன்றியது. நானும் கதையைக் கேட்டு பிரமித்து போனேன். 

கதையைக் கேட்கும் போது நானும் தேசிய மக்கள் சக்திக்கு இவ்வளவு பலமா என்று திகைத்து இருந்தேன். இடையில் ஜனாதிபதி கேட்டார் எதிர்க்கட்சியில் யாராவது துணிந்தவர்கள் இருந்தால் தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கம் எவ்வாறு விழுத்தப்பட போகிறது என்று ஏதாவது யோசனை இருந்தால் சொல்லுங்கள் பார்க்கலாம் என்றார்.

 நான் நினைத்தேன் உண்மையாகவே எங்களிடம் தான் கேள்வியை கேட்கிறார் என்று கேள்வியை கேட்பதற்காக எழும்பி நின்றேன் சபையே என் பக்கம் பார்த்தது. ஆனால், ஜனாதிபதி திரும்பி கூட பார்க்கவில்லை.

 மீண்டும் ஜனாதிபதியை அழைத்தேன். சபை கூட திரும்பிப் பார்த்தது ஆனால் ஜனாதிபதி மற்றைய பக்கம் பார்த்து கதைத்து கொண்டிருந்தார்” என பதிவிட்டுள்ளார்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1754511373.jpg


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!