ரஷிய போருக்கு எதிர்ப்பு: புதினின் ஆலோசகர் பதவி விலகல்; நாட்டைவிட்டு வெளியேறினார்

#world_news #Russia #Ukraine
ரஷிய போருக்கு எதிர்ப்பு: புதினின் ஆலோசகர் பதவி விலகல்; நாட்டைவிட்டு வெளியேறினார்

அனடோலி சுபைஸ், 1990-களில் ரஷியாவின் பொருளாதார சீர்திருத்தங்களை கட்டமைத்தவர்களில் முக்கியமானவராகக் கருதப்படுபவர். 1990-களில் ரஷியா தனியார்மயமாக்குதலை ஊக்குவித்த போது சுபைஸ் அதை பார்த்து செதுக்கி கட்டமைத்தார். புதினின் வளர்ச்சியை ஆதரித்தவர் சுபைஸ்
கடந்த வாரம் தனது சகாவும் பொருளாதார நிபுணருமான யெகோர் கைடார் மறைவை ஒட்டி தனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு பதிவிட்ட சுபைஸ், என்னைவிட ரஷியா எதிர்கொண்டுள்ள ஆபத்துக்களை சரியாக கணித்தவர் என்று பதிவிட்டிருந்தார்.

ரஷிய தாக்குதல் தொடங்கியதிலிருந்தே தனது நடவடிக்கை மீதான உள்நாட்டு விமர்சனங்களை ரஷியா அரசு கடுமையாக எதிர்த்து வருகிறது. அண்மையில் மக்கள் முன்னிலையில் பேசிய ரஷிய அதிபர் புதின், ராணுவ நடவடிக்கையை விமர்சிப்பவர்கள் அனைவரும் தேசத்துரோகிகள் என கூறினார்.

இந்நிலையில் தான் ரஷிய அதிபர் புதினின் ஆலோசகரான அனடோலி சுபைஸ் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். முன்னதாக கடந்த வாரம் அர்காடி டிவோர்கோவிச் என்ற பொருளாதார மேதையும் ரஷியாவுக்கான ஆலோசனக் குழுவில் இருந்து விலகினார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!