நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியான உக்ரைன் நடிகை ! அதிகாரப்பூர்வமான அறிவிப்பு.
#TamilCinema
#Ukraine
#Actress
Mugunthan Mugunthan
3 years ago

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் சிவகார்த்திகேயன், இவர் நடிப்பில் கடைசியாக வெளியான டாக்டர் திரைப்படம் பெரிய வெற்றியடைந்தது.
அதன்படி அப்படம் 100 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது, இதுவே சிவகார்த்திகேயனின் திரைப்பயணத்தில் அதிக வசூல் செய்த திரைப்படமாக உள்ளது.
அப்படத்தை தொடர்ந்து அடுத்து சிவகார்த்திகேயன் நடிப்பில் டான் திரைப்படம் வெளியாகவுள்ளது, அதனை அனைவரும் எதிர்பார்த்துள்ளனர்.
SK20 படத்தின் அப்டேட்
இதற்கிடையே SK20 படத்தின் ஷூட்டிங் துவங்கியுள்ள நிலையில் அப்படம் குறித்த புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.
அதன்படி முன்பே வெளியான தகவல் போல் இப்படத்தில் வெளிநாட்டு நடிகை சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகியுள்ளார். உக்ரைன்-யை சேர்ந்த மரியா ரியாபோஷாப்கா SK20 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக அறிவித்துள்ளனர்.



