வலிமையைத் தொடர்ந்து அஜித்தின் 62-ஆவது படத்தை இயக்குகிறார் விக்னேஷ் சிவன்?
#TamilCinema
#Actor
#Film
Mugunthan Mugunthan
3 years ago

நடிகர் அஜித்குமாரின் 62ஆவது திரைப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
வலிமை படத்தைத் தொடர்ந்து மீண்டும் ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கிறார். படத்திற்கான முதல் கட்ட வேலைகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் அஜித் குமாரின் அடுத்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்க உள்ளதாகவும், நயன்தாரா நாயகியாக நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
படத்திற்கு அனிருத் இசை அமைக்க உள்ளதாகவும், லைகா நிறுவனம் தயாரிக்க ஒப்பந்தம் செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.



