உக்ரைனில் உள்ள ரஷ்ய சொத்துக்களை கைப்பற்றும் சட்டத்தில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கையெழுத்திட்டார்

உக்ரைன் மற்றும் ரஷியா இடையேயான போர் தொடர்ந்து 15-வது நாளாக தொடர்ந்து நீடித்து வருகிறது. இதில், இரு நாடுகளை சேர்ந்த பொதுமக்கள், வீரர்கள் என பலர் உயிரிழந்து உள்ளனர். போரை முன்னிட்டு பல்வேறு நாடுகளை சேர்ந்த லட்சக்கணக்கானோர் உக்ரைனில் இருந்து பாதுகாப்பு தேடி வெளியேறி வருகின்றனர்.
ரஷிய படைகள் முக்கிய நகரங்களில் ஏவுகணை, வான் மற்றும் பீரங்கி தாக்குதல்களை நடத்தி வருகிறது. அதே நேரத்தில் ரஷியாவிற்கு உக்ரைனும் ஈடுகொடுத்து வருகிறது. இதுவரை 20 லட்சத்திற்கும் கூடுதலானோர் அகதிகளாக வெளியேறி உள்ளனர் என ஐ.நா. அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
இந்த நிலையில், ரஷியா-உக்ரைன் இடையே போர் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், உக்ரைனில் உள்ள ரஷ்ய சொத்துக்களை கைப்பற்றும் சட்டத்தில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இன்று கையெழுத்திட்டதாக தி கிவ் இண்டிபென்டன்ட் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ரஷ்ய கூட்டமைப்புக்கு சொந்தமான சொத்துக்களை உக்ரைன் அரசாங்கம் பறிமுதல் செய்ய சட்டம் அனுமதிக்கிறது. உக்ரைன் பாராளுமன்றம் இந்த சட்டத்தை மார்ச் 3 அன்று நிறைவேற்றியது.



