ரசிகர்களுக்காக 25 கிலோ உடல் எடையைக் குறைக்கும் அஜித் - ஏகே61 அப்டேட்

#TamilCinema #Actor
Prasu
3 years ago
ரசிகர்களுக்காக  25 கிலோ உடல் எடையைக் குறைக்கும் அஜித் - ஏகே61 அப்டேட்

‘நேர்கொண்ட பார்வை’, ‘வலிமை’ படங்களைத் தொடர்ந்து அஜித்-ஹெச்.வினோத்-போனி கபூர் கூட்டணி மீண்டும் மூன்றாவது முறையாக ‘அஜித் 61’ படத்தில் இணைந்துள்ளனர். வரும் மார்ச் 9 ஆம் தேதி முதல் ஹைதராபாத்தில் படப்பிடிப்புத் துவங்கவுள்ளது. இதற்காக, பிரம்மாண்ட அரங்கை கடந்த ஒரு மாதமாக ’அஜித் 61’ படக்குழுவினர் அமைத்து வருகிறார்கள். வரும் தீபாவளிக்கு ’அஜித் 61’ படத்தினை திரைக்குக் கொண்டுவர திட்டமிட்டுள்ளார்கள். நாயகியாக தபுவும், ‘பிக்பாஸ்’ கவின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது.

இந்த நிலையில், அஜித் ‘அஜித் 61’ படத்திற்காக 25 கிலோ உடல் எடையை குறைக்க திட்டமிட்டு, தற்போது, 10 கிலோ எடையை குறைத்துள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக, தனி பயிற்சியாளரையும் அஜித் நியமித்துள்ளார். ‘வலிமை’ படத்தில் அஜித்தின் உடல் எடை சில காட்சிகளில் ஒல்லியாகவும் சில காட்சிகளில் அதிகரித்தும் காணப்பட்டது விமர்சனம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!