சுந்தர்.சி திரைப்படத்தில் இணையும் 3 பிக்பாஸ் நடிகைகள்
#TamilCinema
Prasu
3 years ago
ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த் ஆகியோர் நாயகர்களாக நடிக்கும் படத்தை சுந்தர்.சி தற்போது இயக்கி வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஊட்டியில் நடைபெற்று வருகிறது.
இந்தப் படத்தில் ரைசா வில்சன், அம்ரிதா ஐயர், ஐஸ்வர்யா தத்தா, பிரதாப் போத்தன், சுந்தர்.சி, சம்யுக்தா, டிடி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார்.
இவர்களில் ரைசா வில்சன், ஐஸ்வர்யா தத்தா, சம்யுக்தா ஆகிய 3 பேரும் முன்னாள் பிக்பாஸ் போட்டியாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் சுந்தர்.சியின் உள்ளத்தை அள்ளித்தா போன்ற நகைச்சுவைக்கு அதிக முக்கியத்துவம் உள்ள படமாக உருவாகி வருகிறது.



