மிட்போட் பகுதியில் ஆண் புலியொன்று சடலமாக மீட்பு

Prathees
3 years ago
மிட்போட் பகுதியில் ஆண் புலியொன்று சடலமாக மீட்பு

நோட்டன் பிரிட்ஜ்  பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மிட்போட் பகுதியில் தனியார் தோட்டப்பகுதியிலிருந்து இறந்து கிடந்த புலியொன்று இன்று (25) பிற்பகல் மீட்கப்பட்டுள்ளது.

 தொழிலுக்குச் சென்றவர்களால் புலியின் சடலமொன்று கிடப்பது தொடர்பில், நோட்டன் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதனையடுத்து,  நல்லத்தண்ணி வனவிலங்கு அதிகாரிகளுக்கு பொலிஸார் தகவல் கொடுத்தனர்.  அந்த புலியின் சடலம் ரந்தனிகலவில் உள்ள வனவிலங்கு வைத்தியசாலைக்கு பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளது. 

சுமார் 8 வயது மதிக்கத்தக்க ஆண்  புலியின் சடலத்தில் காயங்கள் இருப்பதாகத் தெரிவித்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் அறிவித்தனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!