NATO இராணுவ அவசர கூட்டத்திற்கு போரிஸ் ஜோன்சன் அழைப்பு
Mayoorikka
3 years ago

உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு ஐரோப்பாவிற்கு ஒரு பேரழிவு என்று இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜோன்சன் கூறுகிறார்.
மேலும் நேட்டோ இராணுவ கூட்டணியின் அவசர கூட்டத்திற்கும் அழைப்பு விடுத்துள்ளார்.
"இது எங்கள் கண்டத்திற்கு ஒரு பேரழிவு," என்று ஜோன்சன் ட்விட்டரில் கூறினார்.
மேலும் இது குறித்து ஒரு தேசிய உரையை வெளியிடுவேன் என்றும் கூறினார்.
"நான் சக G7 தலைவர்களிடமும் பேசுவேன், விரைவில் அனைத்து நேட்டோ தலைவர்களின் அவசர கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கிறேன்," என்று அவர் மேலும் கூறினார்.



