தலைநகரிலிருந்து தப்பிக்க முயலும் குடிமக்கள்: தெருக்களில் குழுமியிருந்து பிரார்த்தனை செய்யும் நிலை

Mayoorikka
3 years ago
தலைநகரிலிருந்து தப்பிக்க முயலும் குடிமக்கள்: தெருக்களில் குழுமியிருந்து பிரார்த்தனை செய்யும் நிலை

மாஸ்கோ நேரப்படி, அதிகாலை 5.55 மணிக்கு உக்ரேனுக்கு இராணுவ தாக்குதலை அறிவித்தார் ரஷ்ய ஜனாதிபதி புடின். சில நிமிடங்களுக்குப் பிறகு உக்ரேனில் முதல் ஷெல் மற்றும் ஏவுகணைகள் ஏவப்பட்டன என்று தகவல் தெரிவிக்கின்றது.

இதனையடுத்து, தலைநகர் கீவ்வில், அவசரக்கால சைரன் ஒலிக்கப்பட்டது. மேலும் மக்கள் நகரத்தை விட்டு வெளியேறும் போது கார்களின் வரிசை அதிவேக நெடுஞ்சாலையை அடைத்திருப்பதைப் படங்கள் காட்டுகின்றன.

சமூக ஊடகங்களில் அங்கு வளர்ந்து வரும் அச்ச உணர்வு பற்றி பல்வேறு பதிவுகள் வெளியாகி வருகின்றன. சிலர் தாங்கள் வெடிகுண்டு கூடாரங்களுக்கும் அடித்தளங்களுக்கும் விரைந்ததாகக் கூறுகின்றனர். 

மக்கள் தெருக்களில் குழுமியிருந்து பிரார்த்தனை செய்வதை சர்வதேச தொலைகாட்சிகளில் ஒளிபரப்பட்ட காணொளிகள் காட்டுகின்றன.

கீவ்வில் உள்ள கார்டியன் பத்திரிகையின் செய்தியாளர் லூக் ஹார்டிங்,  ட்விட்டரில் மக்கள் ஏடிஎம் இயந்திரங்களின் முன் வரிசையில் நிற்பதாகக் கூறியுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!