அயர்லாந்தில் முகக்கவசம் அணிவது கட்டாயம் என்ற கட்டுப்பாடு நீக்கம்
Keerthi
3 years ago

முகக்கவசம் அணிவது கட்டாயம் என்ற கட்டுப்பாடு நீக்கப்படுவதாக அயர்லாந்து அரசு அறிவித்துள்ளது.
கொரோனா பரவலை அடுத்து பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம் என இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அயர்லாந்து அரசு அறிவித்திருந்தது. மீறுவோருக்கு அபராதமும் விதிக்கப்பட்டது. இந்நிலையில், முகக்கவசம் அணிவது கட்டாயம் என்பன உள்ளிட்ட அனைத்து கட்டுப்பாடுகளும் வரும் 28ஆம் தேதி முதல் நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா அறிகுறிகள் தென்படுவோர் தனிமைப்படுத்திக்கொண்டு மருத்துவர்களை அணுக வேண்டும் என அயர்லாந்து அரசு கூறியுள்ளது.



