பஸில் மௌனம் காப்பது ஏன்? - இது பெரும் அநீதி என எதிரணி சாடல்

#Basil Rajapaksa #government
Reha
3 years ago
பஸில் மௌனம் காப்பது ஏன்? - இது பெரும் அநீதி என எதிரணி சாடல்

நாட்டின் நிதி நிலைவரம் தொடர்பில் நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச, நாடாளுமன்றத்துக்குத் தெரியப்படுத்தாமல் இருப்பது பெரும் அநீதியாகும் என்று எதிரணி பிரதம கொறடாவான நாடாளுமன்ற உறுப்பினர் லக்‌ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இது தொடர்பில் இன்று கருத்து வெளியிட்ட அவர் மேலும் கூறியதாவது:-

"அரச நிதி அதிகாரம் என்பது நாடாளுமன்றத்துக்கே இருக்கின்றது. நிதி அமைச்சர் நாடாளுமன்றத்துக்குப் பொறுப்புக்கூறகி கடமைபட்டுள்ளார்.

நாட்டில் தற்போது கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இறுதியாக டிசம்பர் 10 ஆம் திகதியே நிதி அமைச்சர் சபையில் உரையாற்றினார். இரு மாதங்கள் ஆகின்றன. நாட்டு நிதி நிலைமை பற்றி அவர் கதைக்கவில்லை. இது பெரும் அநீதியாகும். ஊடகங்கள் வாயிலாகவே தகவல்கள் பெற வேண்டியுள்ளது. ஆக நாட்டில் என்ன நடக்கின்றது?” – என்றார்.
 
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!