உலகில் இன்றைய தினம் வரலாற்று மைல்கல்லை எட்டியுள்ளது

உலகில் இன்றைய தினம் வரலாற்று மைல்கல்லை எட்டியுள்ளது. என்ன என்கிறீர்களா...? இன்று பிப்ரவரி 22. சரி இதிலென்ன இருக்கிறது? நடப்பு ஆண்டான 2022 மற்றும் இன்றைய தினம் இணைந்து எழுதப்படும்போது அதில் ஒரு புதுமை ஒளிந்துள்ளது.
அதனை மேற்குறிப்பிட்ட படம் வெளிப்படுத்தும். நாள்காட்டியில் ஒரு சில நாட்களே மிக அரிய வகையாக இதுபோன்று அமையும். இந்த நாளை முன்னிருந்து பின், பின்னிருந்து முன் மற்றும் மேலிருந்து கீழ் என ஆங்கில முறைப்படி வாசிக்கும்போது, வேறுபடாமல் இருப்பது இதன் சிறப்பம்சம்.
இதனை ஆங்கிலத்தில் பேலின்டிரோம் என கூறுகின்றனர். அப்படியெனில், வார்த்தைகள், வாக்கியங்கள் அல்லது ஒரு தொடரெண்கள் ஆகியவற்றை முன்னிருந்து பின்னாகவும், பின்னிருந்து முன்னாகவும் வாசிக்கும்போது, எண்கள் ஒரே மதிப்பில் இருக்கும். சொற்றொடர்கள் அர்த்தமும் கொண்டிருக்கும். இதுபோன்று அமைவது மிக அரிது. அந்த வகையில் இன்றைய தினம் வரலாற்று முக்கியத்துவம் பெற்றுள்ளது.



