படப்பிடிப்பில் பிஸியான ஐஸ்வர்யா ரஜினிகாந்த்! இன்ஸ்டாவில் வெளியிட்ட போட்டோ..
Reha
3 years ago

18 வருட திருமண வாழ்க்கைக்கு பிறகு நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கடந்த ஜனவரி மாதம் பிரிய முடிவு செய்து பரஸ்பர அறிக்கையை வெளியிட்டனர்.
மேலும் தற்போது அவர்கள் இருவரும் தங்களின் வேளைகளில் பிஸியாக இருந்து வருகின்றனர். அந்த வகையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மியூசிக் வீடியோ ஒன்றை தனது குழுவுடன் இணைந்து இயக்கி வருகிறார்.
பல மொழிகளில் தயாராகி வரும் அந்த பாடல் வீடியோவின் தமிழ் வெர்ஷனில் அனிருத் நடிக்கின்றார். அந்த ப்ரோமோ காதலர் தினத்தன்று வெளியாகி வரவேற்ப்பை பெற்றது.
இந்நிலையில் தற்போது ஐஸ்வர்யா அந்த பாடல் வீடியோவின் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.



