இலங்கையில் சரஸ்வதி சிலையை திறந்து வைத்த 2021ஆம் ஆண்டுக்கான சர்வதேச அழகி (PHOTO)
Nila
3 years ago

ஜக்கிய இராச்சியத்தின் 2021ஆம் ஆண்டுக்கான சர்வதேச அழகி செல்வி இவஞ்சலின் (evanjelin elchmanar) 9அடி உயரமான சரஸ்வதி சிலையை இன்று திறந்து வைத்தார்.
அம்பாறை மாவட்டம் நாவிதன்வெளியைச் சேர்ந்த செல்வி இவஞ்சலின் இலங்கை வந்திருந்தார்.
அவருடன் அவரது தாயார் சாந்தி ராஜகருணாவும் வருகைதந்துள்ளார்.
நாவிதன்வெளி - அன்னாமலை மகாவித்தியாலயத்தில் 9அடி உயரமான சரஸ்வதித் தாயின் சிலை திறப்புவிழா இன்று நடைபெற்றது.
சிலையை இவஞ்சலின் திறந்துவைக்க சிலைக்கான நினைவுப் படிமக்கல்லை அவரது தாயார் சாந்திராஜகருணா திரைநீக்கம் செய்துவைத்தார்.
.jpg)
.jpg)
.jpg)




