பொலிஸ் அதிகாரியின் வலது கையை கடித்த இராணுவ சிப்பாய் கைது!

Mayoorikka
3 years ago
பொலிஸ் அதிகாரியின் வலது கையை கடித்த இராணுவ சிப்பாய் கைது!

ஹிரிபிட்டிய பொது விளையாட்டரங்கில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியின் போது கல்நேவ பொலிஸ் நிலைய போக்குவரத்து பொறுப்பதிகாரியின் வலது கையை கடித்த இராணுவ சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 இசை நிகழ்ச்சி நடைபெற்ற  மைதானத்திற்கு வெளியே இரு குழுக்களிடையே ஏற்பட்ட மோதலை சமரசம் செய்ய பொலிஸ்  அதிகாரி சென்றுள்ள போதே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. காயமடைந்த பொலிஸ் அதிகாரி சிகிச்சைக்காக கல்நேவ பிராந்திய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 கைது செய்யப்பட்ட இராணுவ வீரரும் பொலிஸ் பாதுகாப்பில் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

 சந்தேக நபர் அரலகங்வில பீரங்கி படையணியில் கடமையாற்றும் ஹோமாகம பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!