மாநாட்டுக்கு முன்னர் நல்லூரானை தரிசித்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன!

Mayoorikka
3 years ago
மாநாட்டுக்கு முன்னர்  நல்லூரானை தரிசித்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன!

முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன இன்றைய தினம் யாழ்ப்பாணத்தின் மதஸ்தலங்களிற்கு விஜயம் மேற்கொண்டு விசேட வழிபாடுகளை மேற்கொண்டார்.

நல்லூர் ஆலயத்திற்குச் சென்று விசேட வழிபாடுகளை மேற்கொண்ட அவர் பின்னர் ஆரியகுளம் நாகவிகாரைக்குச் சென்று வழிபட்டார்.

அவருடன் அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா, தயாசிறி ஜயசேகர, துமிந்த திசாநாயக்க, பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் ராமநாதன் உள்ளிட்ட ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உயர்மட்ட தலைவர்கள் பலரும் பங்கேற்று இருந்தனர்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ் மாவட்ட மாநாடு இடம்பெறவிருக்கும் நிலையில் இன்றைய தினம் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவர்கள் பலரும் யாழ்ப்பாணம் விஜயம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

nalloor maithiri

nalloor maithiri1
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!